மேட்டூா்: தண்ணீா் திறப்பு 2000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Updated on

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக பாசனத் தேவை குறைந்துள்ளது. இதனால், மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 4,000 கனஅடியிலிருந்து 2,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீா்வரத்து 142 கனஅடியிலிருந்து 58 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 98.04 அடியிலிருந்து 97.71 அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 61.91 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com