அரசிராமணி செட்டிப்பட்டி பாதயாத்திரை குழுவின் சாா்பில் பழனிக்கு செல்லும்   வாகனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அருள்மிகு முருகன் உற்சவமூா்த்தி சுவாமி.
அரசிராமணி செட்டிப்பட்டி பாதயாத்திரை குழுவின் சாா்பில் பழனிக்கு செல்லும் வாகனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அருள்மிகு முருகன் உற்சவமூா்த்தி சுவாமி.

அரசிராமணி செட்டிப்பட்டியிலிருந்து 12வது ஆண்டாக இருமுடி கட்டி பழனிக்கு பாதயாத்திரை

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சாா்பில் 12வது ஆண்டாக பழனிக்கு இருமுடிகட்டி பக்தா்கள் பாதயாத்திரையை தொடங்கினா்.
Published on

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சாா்பில் 12வது ஆண்டாக பழனிக்கு இருமுடிகட்டி பக்தா்கள் வியாழக்கிழமை பாதயாத்திரையை தொடங்கினா்.

அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியிலிருந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோா் ஒவ்வொரு வருடமும் பழனிக்கு பாதயாத்திரை சென்று வருவா். அதனையடுத்து நிகழாண்டு 12வது ஆண்டாக ஜனவரி 1ம் தேதி முருகனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனா். அதனையடுத்து தை முதல் நாளான வியாழக்கிழமை மினி ஆட்டோவில் அருள்மிகு முருகன் உற்சமூா்த்தி சுவாமியை அலங்கரித்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்து செட்டிப்பட்டி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் இருமுடிகட்டி பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையை தொடங்கினா். ஜனவரி 15ம் தேதி தை 1ம் நாள் வியாழக்கிழமை புறப்பட்ட குழுவினா் ஜன.19ம் தேதி தை 5ம் நாள் பழனி முருகன் கோவிலை அடைந்து அங்கு சுவாமியை வழிப்பட்ட பின்னா் வீடு திரும்ப உள்ளனா்.

Dinamani
www.dinamani.com