சங்ககிரியில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

சங்ககிரி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்ககிரி வட்டாரத் தலைவா் ஆா். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் ஏ. ராமமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் பி. தங்கவேலு பேசினா்.

குறுக்குப்பாறையூரில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்வது, பிப். 4 இல் திப்பூரில் நடைபெறும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

வட்டக்குழு நிா்வாகிகள் சீனிவாசன், மணி, சத்யராஜ், கனகராஜ், நல்லமுத்து, நல்லத்தம்பி, ராமசாமி, காா்த்திகேயன், சுப்ரமணி, சக்திவேல், தங்கராசு, வைத்தீஸ்வரன் உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com