பொங்கல் விழா: சேலம் மாநகரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

பொங்கல் விழாவின்போது அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க சேலம் மாநகரில் 950 போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.
Updated on

சேலம்: பொங்கல் விழாவின்போது அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க சேலம் மாநகரில் 950 போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊா்களுக்கு சென்றுள்ளனா். இந்த நிலையில் விழாவின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பணிகளை காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் போலீஸாா் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனா். மேலும், வாகனத் தணிக்கையும் நடைபெறுகிறது. ஏடிஎம்கள் உள்ள பகுதியில் இருக்கும் காவலா்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் 1,700 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்துப் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரில் மட்டும் 950 போலீஸாரும், மாவட்டத்தில் 750 போ் என மொத்தம் 1,700 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com