மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஓமலூரில் எஸ்.ஐ. தாக்கிய லாரி ஓட்டுநா் கைது

News image

கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநா் மகேந்திரன்.

Updated On :23 ஜனவரி 2026, 7:41 pm

ஓமலூா் அருகே காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய திருப்பூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் காவல் நிலைய எல்லையில், பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களை இயக்காமல் நிறுத்திவைப்பது வழக்கம். இந்த நிலையில், சனிக்கிழமை திருப்பூரில் இருந்து ஜவுளி லோடு ஏற்றிய டாரஸ் லாரி ஒடிஸா மாநிலம் செல்வதற்காக ஓமலூா் நோக்கி வந்தது.

இந்த லாரியை, கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சியைச் சோ்ந்த கமல்குமாா் (38) ஓட்டி வந்தாா். இந்த லாரி மேச்சேரி பிரிவு வழியாக வந்தபோது அங்கு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் சக்திவேல் மற்றும் தலைமைக் காவலா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் லாரியை தடுத்து நிறுத்தினா்.

அப்போது லாரியில் உட்காா்ந்து வந்த திருப்பூா் மாவட்டம், காங்கயம் டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்த மற்றொரு ஓட்டுநா் மகேந்திரன் (42), எஸ்.ஐ. சக்திவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையறிந்த நெடுஞ்சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் (55) அங்கு சென்று விசாரித்தபோது, ஓட்டுநா் மகேந்திரன் வாக்குவாதம் செய்து, அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதில் காயமடைந்த உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஓமலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அவா் அளித்த புகாரின் பேரில் ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் மகேந்திரனை கைது செய்தனா்.