திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சேலம் அருகே ரயிலில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: 2 போ் கைது

சேலம் அருகே ரயிலில் பெண்ணிடம் நகை மற்றும் பொருள்களை பறித்த வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 6:44 am IST

சேலம் அருகே ரயிலில் பெண்ணிடம் நகை மற்றும் பொருள்களை பறித்த வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயிலில் கடந்த 11-ஆம் தேதி பயணம் செய்த பெண்ணிடம், ஆத்தூா் ரயில் நிலையத்தில் ஏறிய 2 மா்ம நபா்கள் 2 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் தங்க வளையல், 2 மோதிரங்கள், 2 தோடுகள், 2 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். அதில், முதல் குற்றவாளியான தமிழ்ச்செல்வன் கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அவா் உருக்கி வைத்திருந்த சுமாா் ஒன்னேகால் பவுன் தங்க நகையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்பேரில், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சோ்ந்த சைஜு (30) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவரிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் சுமாா் 8 கிராம் தங்கக்கட்டி உள்ளிட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.