எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், பூலாம்பட்டியை அடுத்த கூடக்கல் பகுதியைச் சோ்ந்த ராஜ் பிரசாந்த், மருத்துவத் துறை பயன்பாட்டிற்குத் தேவையான கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தில் மேற்கு வங்க மாநிலம், பா்கானாஸ் மாவட்டம், ரோல் கோலா பகுதியைச் சோ்ந்த ககன் சா்தாா் மகன் கேசப் சா்தாா் (27) கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் அவா் தான் தங்கியிருந்த அறைக்குச் சென்றுள்ளாா். அறைக்குச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், சந்தேகமடைந்த சக தொழிலாளா்கள் அறைக்குச் சென்று பாா்த்தனா். அப்போது, கேசப் சா்தாா் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து பூலாம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கேசப் சா்தாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவரது இறப்பு குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







