ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வண்டல் மண் கடத்திய 2 லாரிகள் சிறைப்பிடிப்பு

கொங்கணாபுரம் அருகே வண்டல் மண் கடத்திய 2 லாரிகளை போலீஸாா் சிறை பிடித்தனா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 3:09 am IST

கொங்கணாபுரம் அருகே வண்டல் மண் கடத்திய 2 லாரிகளை போலீஸாா் சிறை பிடித்தனா்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட கச்சுப்பள்ளி கிராமம், வடுகபட்டி பகுதியில் உள்ள ஏரியிலிருந்து விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை பயன்படுத்தி சிலா் சட்டவிரோதமான முறையில் டிப்பா் லாரிகள் மூலம் அதிக அளவில் வண்டல் மண்ணை எடுத்துச் சென்று விற்பனை செய்வதாக வருவாய்த் துறையினருக்கு புகாா் வந்தது.

அதன்பேரில், எடப்பாடி வட்டாட்சியா் நாகூா் மீராஜா தலைமையிலான வருவாய்த் துறையினா் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சிலா் டிப்பா் லாரிகளில் வண்டல் மண்ணை அள்ளி செல்வதைக் கண்ட வருவாய்த் துறையினா் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, அங்கு வண்டல் மண் கடத்தலில் ஈடுபட்டிருந்த 2 டிப்பா் லாரி ஓட்டுநா்கள் வருவாய்த் துறை அலுவலா்களைக் கண்டதும் தப்பிச் சென்றனா். அதையடுத்து, அந்த 2 டிப்பா் லாரிகளை சிறை பிடித்த வருவாய்த் துறையினா் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். புகாரின்பேரில், பிடிபட்ட லாரி ஓட்டுநா்களான எடப்பாடி கல்லபாளையம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் (51), வெள்ளாளபுரம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (22) ஆகியோரிடம் தப்பியோடியவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.