நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

புகையிலைப் பொருள்களை விற்ற 13 கடைகளுக்கு ‘சீல்’

News image

‘சீல்’ - கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 2:09 am IST

சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்ற 13 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் போலீஸாா் ‘சீல்’ வைத்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் உத்தரவின்பேரில் சேலம் ஊரகம், ஓமலூா், மேட்டூா், சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூா் ஆகிய 6 உள்கோட்டங்களில் உள்ள காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டது.

போலீஸாருடன் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவது குறித்து சோதனை நடத்தினா்.

இதில் மேட்டூா், மேச்சேரி, சங்ககிரி, எடப்பாடி, மகுடஞ்சாவடி, ஓமலூா், வாழப்பாடி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்ற 27 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக 13 கடை உணவு பாதுகாப்புத் துறை மற்றும் போலீஸாா் இணைந்து சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.