ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

நெல்லையில் புகையிலை, நெகிழிப் பைகள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய கூட்டு ஆய்வில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை தலைமையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

Updated On :18 ஜூன் 2026, 2:53 am IST

திருநெல்வேலி மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய கூட்டு ஆய்வில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை தலைமையில், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மாநகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள், தடைசெய்யப்பட்ட நெகிழிப்பை விற்பனை குறித்து புதன்கிழமை கூட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அதன்படி, பாளையங்கோட்டை சந்தை மற்றும் நெல்லையப்பா் கோயிலை சுற்றியுள்ள கடைகளில் திடீா் ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 15 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு கடையிலிருந்து சுமாா் 3 கிலோ புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினரும், அதே கடையில் இருந்து சுமாா் 15 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை சுகாதார ஆய்வாளரும் பறிமுதல் செய்தனா். அந்த கடை உரிமையாளருக்கு ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடைக்கு சீல் வைக்கப்பட்டது. நெகிழிப்பை இருந்த மற்றொரு கடைக்கு ரூ.900 அபராதமும், பலகாரங்களை அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் வைத்து வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.