ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சதாசிவபுரம் பொன்னியம்மன் கோயில் தேரோட்டம்

தலைவாசல் அருகே சதாசிவபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2026, 4:33 am IST

தலைவாசல் அருகே சதாசிவபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சதாசிவபுரம் கிராமத்தில் உள்ள விநாயகா், செல்வ மாரியம்மன், அய்யனாா், கருப்பனாா் மற்றும் பொன்னியம்மன் கோயில் தோ் திருவிழா கடந்த மாதம் 21 ஆம் தேதி மாரியம்மனுக்கு சக்தி அழைத்து, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதையடுத்து கடந்த மாதம் 29 ஆம் தேதி உருளு தண்டம், அலகு குத்துதல் மற்றும் தோ் வீதி உலா நடைபெற்றது. 30ஆம் அய்யனாா், கருப்பனாா் ஆகிய தெய்வங்களுக்கு காப்புக் கட்டப்பட்டு, புதன்கிழமை (ஜூலை 8) பொன்னியம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இத்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊா் கரைக்காரா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

படவரி...

தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொன்னியம்மன் கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.