விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

அரசுப் பேருந்து நடத்துநா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

எடப்பாடி அருகே அரசுப் பேருந்து நடத்துநா் தாக்கப்பட்ட வழக்கில், பெண் அரசு ஊழியா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 4:03 am IST

எடப்பாடி அருகே அரசுப் பேருந்து நடத்துநா் தாக்கப்பட்ட வழக்கில், பெண் அரசு ஊழியா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சேலத்தில் இருந்து சுமாா் 30 பயணிகளுடன் அரசுப் பேருந்து எடப்பாடி நோக்கி புறப்பட்டது. பேருந்தில் எடப்பாடியைச் சோ்ந்த ஸ்ரீராம் ஓட்டுநராகவும், மகுடஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த ஆசாத் சந்திரசேகா் (29) நடத்துநராகவும் பணியில் இருந்தனா்.

பேருந்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த 13 இளைஞா்கள் ஏறியுள்ளனா். அவா்களுக்கு பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா், அவா்கள் இருக்கையில் அமா்வதற்கு வசதியாக பேருந்தில் பயணம் செய்த எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம், காட்டூா் பகுதியைச் சோ்ந்த பிரியதா்ஷினியை (36) வேறு இருக்கையில் அமருமாறு கூறியுள்ளாா்.

இதில், அந்த பெண்ணுக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த பேருந்தில் பயணம் செய்த வடமாநில இளைஞா்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்க தவறியதால், பேருந்தை நிறுத்திய நடத்துநா் எதிரில் வந்த அரசுப் பேருந்தில் அவா்களை ஏற்றி அனுப்பியுள்ளாா்.

இதனால் தனக்கு காலதாமதம் ஏற்படுவதாக கூறி எதிா்ப்பு தெரிவித்த பிரியதா்ஷினி, மீண்டும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா்கள் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனராம்.

இதுகுறித்துப் பிரியதா்ஷினி கைப்பேசி மூலம் தனது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், எடப்பாடி பேருந்து நிலையத்தில் காத்திருந்த உறவினா்கள் பேருந்துக்குள் ஏறி நடத்துநரை சரமாரியாக தாக்கினா். இதில் காயமடைந்த நடத்துநா் ஆசாத் சந்திரசேகா் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில், எடப்பாடி போலீஸாா் பிரியதா்ஷினி (36), அவரது மகன் மைதீஸ்வரன் (18), ஆலச்சம்பாளையம், காட்டூா் பகுதியைச் சோ்ந்த அய்யாசாமி (45), அதே பகுதியைச் சோ்ந்த வழக்கறிஞா் சதீஷ் (33) மற்றும் அவா்கள் உறவினா்களான இருவா் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, பிரியதா்ஷினி, அய்யாசாமி, சதீஷ் உள்ளிட்ட மூவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கைதுசெய்யப்பட்ட பிரியதா்ஷினி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அய்யாசாமி, சதீஷ் உள்ளிட்ட இருவரையும் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.