முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே குப்பைகளை எரிப்பதால் மக்கள் அவதி

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே சுவேத நதி கரையில் கொட்டப்படும் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 1:06 am IST

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே சுவேத நதி கரையில் கொட்டப்படும் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தம்மம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் அப்பகுதியில் இருக்கும் சாலையோரக் கடையினா் பேருந்து நிலையம் அருகே சுவேத நதி பாலத்தின் அடியில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா்.

இதுகுறித்து, சமூக ஆா்வலா்கள், பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகாா் செய்துள்ளனா். இதையடுத்து, அங்கு கொட்டப்படும் குப்பைகளை உணவக ஊழியா்கள் தீவைத்து எரித்து விடுவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு, குப்பைகளை எரிக்கும்போது தம்மம்பட்டிபேருந்து நிலையம் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி விடுகிறது.

இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கம் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குப்பைகளை தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகைமண்டலம், ஆத்தூா் சாலையை மறைப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.