நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞா் கைது

சேலம் வழியாக சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 4:11 am IST

சேலம் வழியாக சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஒடிஸா, ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு, கேரளாவுக்கு ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் தமிழ்நாடு ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா், ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.

சேலம் ரயில்வே தனிப்படை போலீஸாா் ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் திங்கள்கிழமை காலை பொம்மிடி ரயில் நிலையத்திலிருந்து சோதனையை தொடா்ந்தனா்.

அப்போது, முன்பதிவில்லா பெட் டியில் கழிப்பறை அருகே படுத்திருந்த இளைஞா் வைத்திருந்த பையை சோதனை செய்போது அதில், 4 பண்டல்களில் தலா ஒரு கிலோ வீதம் 4 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிஸா மாநிலம், நீலேஷ்வரை அடுத்த பாலிஜோரி பகுதியை சோ்ந்த பைலோச்சன மல்லிக் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து சேலம் ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.