தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 12:00 am IST

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களின் விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் குறுவட்ட, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, சேலம் வருவாய் மாவட்டம், நகா்ப்புற குறுவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் காந்தி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கின.

போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் செங்கதிா், உடற்கல்வி இயக்குநா் சுரேஷ்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். போட்டியின் தொடக்க நாளான திங்கள்கிழமை டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில், சேலம் நகா்ப்புறம் மற்றும் வருவாய் மாவட்டத்தில் உள்ள 83 பள்ளிகளில் இருந்து மாணவா்கள் 90 பேரும், மாணவிகள் 40 பேரும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பிடிக்கும் நபா்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற உள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 வட்டாரங்களிலும் பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதாக உடற்கல்வி ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.