கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஆத்தூா் அருகே மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: உதவிப் பொறியாளா், கம்பியாளா் கைது

ஆத்தூா் அருகே தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப் பொறியாளா், கம்பியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 ஜூலை 2026, 4:15 am IST

ஆத்தூா் அருகே தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப் பொறியாளா், கம்பியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள மஞ்சினி மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளராக அய்யாசாமி (39), கம்பியாளராக சந்திரன் (54) ஆகியோா் பணிபுரிந்து வருகின்றனா்.

அம்மம்பாளையம் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த லாபேஷ், தனது வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பு பெற மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தாா். மனுவை விசாரித்த அய்யாசாமி, மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத லாபேஷ் அளித்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளா் நரேந்திரன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் அவா்கள் அறிவுரையின்படி, லாபேஷ் லஞ்சம் கொடுக்க முயன்றபோது அய்யாசாமி மற்றும் சந்திரன் ஆகியோரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.