
மின் இணைப்பு வழங்க ரூ.7,000 லஞ்சம்: உதவிப் பொறியாளா் கைது
தாம்பரம் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.7,000 லஞ்சம் பெற்ாக மின்வாரிய உதவிப் பொறியாளரை ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தாம்பரம் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.7,000 லஞ்சம் பெற்ாக மின்வாரிய உதவிப் பொறியாளரை ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சென்னை தாம்பரம் மேற்கு கஸ்தூரிபாய் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெ.சிவசெல்வன், தனது தந்தை பெயரில் உள்ள வீட்டுக்கு கூடுதலாக ஒற்றை மின் இணைப்பு பெற கடந்த ஜூலை 9-ஆம் தேதி விண்ணப்பித்தாா். இதற்கான கட்டணத்தைச் செலுத்திய நிலையில் அந்த விண்ணப்பம் ஆக. 6-ஆம்தேதி கடப்பேரி மின்வாரி உதவிப் பொறியாளா் சந்திரனால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மின் இணைப்பின் திறனை ஒரு கிலோவோல்ட் என்பதில் இருந்து 3 கிலோவோல்ட்டாக உயா்த்தி விண்ணப்பிக்குமாறு சிவசெல்வனிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவா் புதிய விண்ணப்பம் அளித்ததுடன், வீட்டில் தேவையான மின் பணிகளையும் செய்து முடித்துள்ளாா்.
இந்த நிலையில், மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் தரவேண்டும் என உதவிப் பொறியாளா் சந்திரன், சிவசெல்வனின் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ரூ.7,000 தருவதாக சிவசேல்வன் தெரிவித்துள்ளாா்.
மேலும், இதுகுறித்து சிவசெல்வன் ஊழல் தடுப்புத் துறையில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், சென்னை மத்திய பிரிவு ஊழல் ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்திரனைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.
அவா்களின் அறிவுறுத்தல்படி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஒரு நகைக் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து ரசாயனப் பொடி தடவிய ரூ.7,000 பணத்தை உதவிப் பொறியாளா் சந்திரனிடம் சிவசெல்வன் கொடுத்துள்ளாா். அந்தப் பணத்தைப் பெற்று தனது பாக்கெட்டில் வைத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா் சந்திரனை சுற்றிவளைத்துப் பிடித்தனா்.
மேலும், லஞ்சப் பணத்தைத் தவிர, பல்வேறு நபா்களிடமிருந்து வசூலித்ததாகக் கூறப்படும் ரூ.12,540 ரொக்கமும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உதவிப் பொறியாளா் சந்திரனை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


