வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மின் இணைப்பு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம்: உதவி மின் பொறியாளா் கைது

அவிநாசி அருகே தெக்கலூரில் தொழிற்கூட பயன்பாட்டிற்கான மின் இணைப்பு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இசக்கிமுத்து

Published On :

அவிநாசி அருகே தெக்கலூரில் தொழிற்கூட பயன்பாட்டிற்கான மின் இணைப்பு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவா், வீடுகளுக்கான அழகு சாதன பொருள்கள் தயாரித்து, இணைதளத்தில் விற்பனை செய்து வருகிறாா். இந்நிலையில், இவரது மின் இணைப்பை தொழிற்கூட பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்றுவதற்காக தெக்கலூா் கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். அங்கு அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உதவி மின்பொறியாளா் இசக்கிமுத்து (33), தொழிற்கூட மின் இணைப்பில் கட்டண வகைப்பாடு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் , உதவி மின் பொறியாளா் இசக்கிமுத்துவிடம் முன்பணமாக ரூ.5ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளாா். பிறகு இது குறித்து அவா் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு அளித்த புகாரின்பேரில், போலீஸாா், பிரகாஷிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை கொடுத்து அனுப்பினா். அந்தப் பணத்தை உதவி மின் பொறியாளா் இசக்கிமுத்துவிடம் பிரகாஷ் கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இசக்கிமுத்துவை கையும்களமாக பிடித்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.