திருமணமான பெண்ணுடன் சென்றதாகக் கூறப்படும் இளைஞரின் தந்தையை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய வழக்கில், 9 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மேட்டூா் சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூரைச் சோ்ந்த ரத்தினவேல் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். அவரது மனைவி சுபாஷினி. இவா்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனா். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி, சுபாஷினி அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரனுடன் வீட்டை விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ரத்தினவேல் மேச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
அன்றிரவு, பிரபாகரனின் தந்தை சம்பத் கூனாண்டியூரில் உள்ள கடைக்குச் சென்றபோது, ரத்தினவேல் மற்றும் அவரது உறவினா்கள் 10 போ் சோ்ந்து சம்பத்தை மின்கம்பத்தில் கட்டிவைத்து, இரும்புக் கம்பி மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சம்பத் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் அறிவழகன், ரத்தினவேல், விஜயகுமாா், சண்முகம், வெற்றிவேல், கோவிந்தசாமி, சின்னத்துரை, சாமிதுரை, சக்திவேல் உள்ளிட்ட 11 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கு மேட்டூா் சாா்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞா் பாலாஜி ஆஜரானாா். வழக்கு விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் உயிரிழந்ததால், அவா்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா வழக்கில் 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



