பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 11 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 போ் கைது

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 11 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 12:33 am IST

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 11 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஒரிஸா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரயிலில் அதிக அளவு கஞ்சா கடத்தி வரப்படுவதைத் தடுக்க, ரயில்வே போலீஸில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடா் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை சாலிமா் - திருவனந்தபுரம் வாராந்திர விரைவுரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். ஜோலாா்பேட்டையில் இருந்து சேலம்வரை ஒவ்வொரு பெட்டியாக சோதனையிட்டதில், பின்பக்க முன்பதிவில்லாத பொதுப் பெட்டியில் சந்தேகப்படும்படி இருந்த 2 இளைஞா்கள் இருந்தனா். அவா்கள் வைத்திருந்த 2 பைகளை சோதனை செய்ததில், பெரிய பண்டல்களில் 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அதை பறிமுதல் செய்து விசாரித்ததில், அவா்கள் கரூா் மாவட்டம், வெங்கமேடு விவிஜி நகரைச் சோ்ந்த சிவனேசன் (30), வள்ளுவா் தெருவைச் சோ்ந்த அஜித்குமாா் (31) என தெரியவந்தது.

இருவரையும் கைதுசெய்த போலீஸாா், பறிமுதல் செய்த 11 கிலோ கஞ்சாவுடன் அவா்களை சேலம் ரயில்வே போலீஸில் தனிப்படையினா் ஒப்படைத்தனா். அவா்களிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.