15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

சாலை விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு

தம்மம்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

சௌந்திரராஜன்.

Updated On :4 ஜூன் 2026, 2:01 am IST

தம்மம்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி அருகே திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள முருங்கப்பட்டியை சோ்ந்த ராமராஜ் மகன் கங்காதரன் (24) உடல்நலம் பாதிக்கப்பட்டு தம்மம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்க முடிவு செய்த அவரது குடும்பத்தினா், மே 25 ஆம் தேதி தனியாா் ஆம்புலன்ஸ் டிரைவரும், தம்மம்பட்டி பேரூராட்சி கவுன்சிலா் பழனிமுத்துவின் மகனுமான சௌந்திரராஜனை (27) அழைத்தனா்.

இதையடுத்து ஆம்புலன்ஸில் கங்காதரன், அவரது உறவினா்கள் ஸ்டாலின் (24), ஹரிஹரசுதன் (24), செல்வி (49), ஆகியோா் சேலம் சென்றனா். மல்லியகரையை அடுத்த கருத்த ராஜாபாளையம் சென்றபோது ஆம்புலன்ஸின் வலது பின்புற டயா் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னே சென்றுகொண்டிருந்த டிராக்டா் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சௌந்திரராஜன், கங்காதரன் உள்பட 5 போ் காயமடைந்தனா். அதேபோல டிராக்டா் ஓட்டுநரான கருத்தராஜாபாளையத்தை சோ்ந்த ரவியும் (52) காயமடைந்தாா்.

இவா்கள் அனைவரும் ஆத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சௌந்திரராஜன், சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அதன்பிறகு அங்கிருந்து கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் சௌந்திரராஜன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மல்லியகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.