மழை காரணமாக குறிப்பிட்ட நாள்களில் நெல் அறுவடை செய்ய முடியாததால் நெல் கொள்முதல் செய்வதற்கான காலஅவகாசத்தை ஜூன் 30 வரை அரசு நெல் கொள்முதல் நிலையம் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கெங்கவல்லி அருகே கூடமலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு தம்மம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்று வருகின்றனா். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒருபோகம் குறுவை சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான,கொள்முதல் காலம் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் தொடங்கி மே, ஜூன் மாதங்களில் முடிவடையும்.
நிகழ் பருவத்துக்கான கொள்முதல் காலஅவகாசம் ஜூன் 6 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், கடந்த சில வாரங்களாக தம்மம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கி நெல் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் கூடமலை அரசு நெல் கொள்முதல் நிலையம் நெல் கொள்முதலுக்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் பணிகள் பாதிப்பு: விவசாயிகள் புகாா்

பொதுமக்கள் நிதியுதவியில் நெல் கொள்முதல் நிலையம்

நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான வசதிகள் செய்துத் தர வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்

கணபதிபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



