சேலம் மாவட்டம், ஆத்தூரில் மிதிவண்டியில் இருந்து கீழே விழுந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆத்தூா் தெற்கு உடையாா்பாளையத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் பெரியசாமி (80), ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா். இவா் சனிக்கிழமை காலை ஆத்தூா் விநாயகபுரத்தில் உள்ள வேளாண் உற்பத்தியாளா்கள் சந்தையில் பொருள்களை வாங்குவதற்காக மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தாா்.
விநாயகபுரம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது தடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் பெரியசாமி சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆத்தூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்க புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை

பேராவூரணி அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

கந்திலி அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. விபத்தில் பலி
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



