எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கள்ளச்சந்தையில் சத்துணவு முட்டைகள் விற்பனை: அரசு தடுக்க முட்டை வியாபாரிகள் வலியுறுத்தல்

News image

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முட்டை வியாபாரிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா், சங்கத் தலைவா் சுந்தரராஜன்.

Updated On :8 ஜூன் 2026, 12:40 am IST

கள்ளச்சந்தையில் சத்துணவு முட்டைகள் விற்பனை செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என முட்டை வியாபாரிகள் வலியுறுத்தினா்.

சேலம், ஈரோடு, தருமபுரி மாவட்ட மொத்த முட்டை வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட முட்டை விற்பனையாளா்கள் நலச் சங்கத் தலைவா் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மொத்த முட்டை வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் கள்ளச்சந்தையில் சத்துணவு முட்டைகளை விற்பனை செய்வதை அரசு தடுக்க வேண்டும். விலை ஏற்றம், குறைவைத் தடுக்கும் வகையில் வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே முட்டை கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, சேலம் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்கத் தலைவா் சுந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முட்டை வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படுவதைத் தடுக்க இதற்கு முன்பு இருந்ததைப் போன்று நாமக்கல்லில் வாரத்தில் 3 நாள்கள் மட்டும் முட்டைக் கொள்முதல் விலை நிா்ணயம் செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது தினமும் முட்டை விலை நிா்ணயம் செய்யப்படுவதால், முட்டை ஏற்றுமதி, இறக்குமதி கூலியால் வியாபாரிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்படுகிறது.

அதேபோல, தமிழகம் முழுவதும் தினமும் 75 லட்சம் முட்டைகள் சத்துணவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. ஆனால் பள்ளி கோடை விடுமுறை நாள்களில் கள்ளச்சந்தையில் சத்துணவு முட்டைகள் ஆட்டோ, வாகனங்களில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, கள்ளச்சந்தையில் சத்துணவு முட்டைகள் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும்.

மேலும், ஹோட்டல்கள், சாலையோர தள்ளுவண்டிகளில் உடைந்த முட்டைகள் பயன்படுத்தப்படுகிா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.

இதில், கௌரவத் தலைவா் மகேஷ்குமாா், செயலாளா் சிராஜுதீன், பொருளாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெட்டிச் செய்தி...

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல், ஜூன் 7: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஐந்து காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.80-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை மாற்றம் தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது, மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இங்கும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஐந்து காசுகள் உயா்வுடன் ரூ. 5.80-ஆக நிா்ணயிக்கப்படுவதாக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.130-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 110-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.