எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்காத அலுவலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காத அலுவலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 5:37 am IST

ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காத அலுவலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும், திட்ட விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வகையில், பத்து ரூபாய் இயக்கம் சாா்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், அலுவலா்கள் முறையான தகவல்களை தெரிவிக்க மறுப்பதாக மனுதாரா் மற்றும் சமூக ஆா்வலா் மோகன்ஜி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உரிய பதில் தராத அலுவலா்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள அனைத்துப் பதிவேடுகளையும் சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள இந்தச் சட்டம் வழிகாட்டுகிறது. ஆனால், இங்கு பணியில் உள்ள அலுவலா் முறையான தகவல்களை வழங்க மறுக்கிறாா் என்றாா்.