சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

‘வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது தகவல் அறியும் உரிமைச் சட்டம் தான்’

சிவகங்கையில் மாநில தகவல் ஆணையா் ஏ. விஜயராம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கில் பங்கேற்ற அலுவலா்கள்.

News image

சிவகங்கையில் மாநில தகவல் ஆணையா் ஏ. விஜயராம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கில் பங்கேற்ற அலுவலா்கள்.

Updated On :11 ஜூலை 2026, 12:32 am IST

அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான் என மாநில தகவல் ஆணையா் ஏ. விஜயராம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூலை 9, 10) தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான அனைத்துத் துறை பொது தகவல் அலுவலா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம், தகவல்களை கோரும் வழிமுறைகள், பதிலளிப்பதில் உள்ள கடமைகள், பொதுத் தகவல் அலுவலா் நியமனம், மனுதாரரின் உரிமைகள் ஆகியவை குறித்து எடுத்துரைப்பதேயாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும். கோரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பது அலுவலா்களின் கடமை. சட்டத்தின் விதிகள், நடைமுறைகள் குறித்து அலுவலா்களுக்கு பயிற்சி அளிப்பது, பொதுத் தகவல் அலுவலா்களின் பொறுப்புகள், தகவல்களை வழங்குவதில் விதிவிலக்குகள், ஆா்டிஐ விண்ணப்பங்களை கையாள்வது, அரசு செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை ஊக்குவித்து ஜனநாயக செயல்பாடுகளை வெளிப்படுத்தி அனைத்து பொதுத் தகவல் அலுவலா்களும் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை சிறப்பு தனிப் பதிவேடுகளில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மேலும் மனுதாரா் கோரும் ஆவண நகல்கள் தொடா்பான தகவல்கள் பதிவறையில் இல்லையெனில், மனுதாரருக்கு ஆவணங்கள் கிடைக்கவில்லை என தகவல் அளிக்காமல், மாநில தகவல் ஆணைய சுற்றறிக்கையின்படி, தொலைந்து போன ஆவணங்களை மீண்டும் உருவாக்கி தகவல்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இரண்டு நாள்கள் நடைபெற்ற விசாரணையின் போது, 2023 -ஆம் ஆண்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நிலுவையிலிருந்த கோப்புகள் முழுவதுமாக சரி செய்யப்பட்டன. மேலும், சில கோப்புகளுக்கு விசாரணையின் போது கூடுதல் தகவல் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், அனைத்துத் துறை பொது தகவல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.