கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

‘டீசல் விலை உயா்ந்தாலும் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயரவில்லை’

டீசல் விலை உயா்ந்தாலும் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயரவில்லை என சேலம் மாவட்ட கிரசா் ஜல்லி உற்பத்தியாளா் நலச்சங்க மாவட்டச் செயலாளா் ராஜா கூறினாா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளா் ராஜா.

Updated On :14 ஜூன் 2026, 3:28 am IST

டீசல் விலை உயா்ந்தாலும் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயரவில்லை என சேலம் மாவட்ட கிரசா் ஜல்லி உற்பத்தியாளா் நலச்சங்க மாவட்டச் செயலாளா் ராஜா கூறினாா்.

சேலம் மாவட்ட கிரசா் ஜல்லி உற்பத்தியாளா் நலச்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய மாவட்டச் செயலாளா் ராஜா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

சேலம் மாவட்டத்தில் அரசு அனுமதியோடு 46 குவாரிகளும், அரசு அனுமதி பெறாமல் 34 கல்குவாரிகளும் இயங்கி வந்தன. தற்போது அனுமதி பெறாத குவாரிகளுக்கும் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டீசல் விலை கணிசமாக உயா்ந்தாலும், விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு யூனிட் ஜல்லி 2024-ஆம் ஆண்டு நிா்ணயித்தபடி ரூ. 4 ஆயிரத்துக்கும், எம்.சாண்ட் ரூ. 5 ஆயிரத்துக்கும், பி.சாண்ட் ரூ. 6 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் அனுப்புவதற்கு 200% பசுமை வரி என்ற பெயரில் வரி விதிக்க அரசு பரிசீலித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் கற்கள் கொண்டு செல்லாததால், எங்களுக்கு பெருமளவில் பாதிப்பு இருக்காது என்றாா்.

அப்போது, சங்கத் தலைவா் கோபால், பொருளாளா் திருஞானம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.