தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல்நிலை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் ஏற்காடு பிரதான சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 1 முதல்நிலை தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 21 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தொடங்கவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு போட்டித் தோ்வுகளில் அனுபவமிக்க பயிற்றுநா்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும், இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு, உடனுக்குடன் மதிப்பெண் வழங்கப்படும். இதன் சிறப்பு அம்சமாக முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்விற்கு குருப் 1 தோ்வில் வெற்றிபெற்ற நபா்கள் மூலம் வழிகாட்டுதல் வழங்கப்படும்.
தோ்வுக்கான அனைத்து புத்தகங்களும் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இப்பயிற்சி வகுப்பு தொடா்பான விவரங்களை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்

சாத்தான்குளம் வட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுக்கான பயிற்சி உடுமலையில் வரும் 20-ஆம் தேதி தொடக்கம்

நாசரேத்தில் போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



