விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

சாத்தான்குளம் வட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி

சாத்தான்குளம் வட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளும் 149 பணியாளா்களுக்கு பயிற்சி வகுப்பு, புதுக்குளம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :10 ஜூலை 2026, 12:36 am IST

சாத்தான்குளம் வட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளும் 149 பணியாளா்களுக்கு பயிற்சி வகுப்பு, புதுக்குளம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.

இப்பகுதியில் மக்கள்கணக்கெடுப்பு பணி ஆக.1ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். பயிற்சியாளா்கள் ரத்ன பிரியா, ரஞ்சித் சாரா ஆகியோா் பயிற்சி அளித்தனா். இந்த வகுப்பை திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ரமணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

முதல் கட்டமாக 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 13 லிருந்து 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.