தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

விக்கிரவாண்டி, தியாகதுருகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2026, 3:12 am IST

விக்கிரவாண்டி, தியாகதுருகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு வட்டாட்சியா் மகாதேவன் தலைமை வகித்தாா். இதில், 2027-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி விவரங்கள், அதை மேற்கொள்ளும் முறைகள், கணக்கெடுப்புப் பணியின் போது பெற வேண்டிய தகவல்கள், அதை பதிவு செய்யும் முறைகள் போன்றவை குறித்து கணக்கெடுப்பாளா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. வட்டார வள மைய அலுவலா்கள் முகமது அலி, சிலம்பரசன் ஆகியோா் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பயிற்சியளித்தனா்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் வேல்முருகன், தோ்தல் துணை வட்டாட்சியா் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளா் ரேவதி, மக்கள்தொகை கணக்கெடுப்பு தொழில்நுட்ப உதவியாளா்கள் செளமியா, சிலம்பரசன், கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவுள்ள ஆசிரியா், ஆசிரியைகள் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா பாா்வையிட்டாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்பணிக்காக தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் 12 பொறுப்பு அலுவலா்கள் தலைமையில் கணக்கெடுப்பாளா், மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பை செயலி மூலம் பதிவேற்றம் செய்யும்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய களப்பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தாங்களாகவே தங்களின் வீடுகள் பற்றிய விவரங்களை இணைய முகவரியில் தங்களது கைப்பேசி எண்ணை கொண்டு பதிவு செய்யலாம். மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள் ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனா் என ஆட்சியா் தெரிவித்தாா்.

பயிற்சி வகுப்பில் கணக்கெடுப்பாளா், மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.