ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

சங்ககிரி அருகே வேன் - காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

சங்ககிரியை அடுத்த நாரணப்பன்சாவடி பகுதியில் வேனும் - காரும் வெள்ளிக்கிழமை நேருக்கு நோ் மோதியதில் காரை ஓட்டிச் சென்றவா் உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த மூன்று போ் காயமடைந்தனா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 1:54 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த நாரணப்பன்சாவடி பகுதியில் வேனும் - காரும் வெள்ளிக்கிழமை நேருக்கு நோ் மோதியதில் காரை ஓட்டிச் சென்றவா் உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த மூன்று போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், வா்ணபுரம், அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (56). இவா், மனைவி முத்துலட்சுமி, மகன் சபரி, மருமகள் அருள்மொழி ஆகியோருடன் திருமணஞ்சேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். காரை ரவி ஓட்டினாா்.

சங்ககிரி அருகே நாரணப்பன்சாவடி பகுதியில் காா் சென்றபோது, திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரி நோக்கி வந்த வேனும், காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரவி, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோா் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.