சேலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் ரத்த தானம் வழங்கி தொடங்கி வைத்தாா்.
தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சேலம் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் தவெக சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.
இம்முகாமை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் ரத்த தானம் வழங்கி தொடங்கிவைத்தாா். ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் அமைச்சா் சான்றிதழ் மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்கினாா். இம்முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்படவுள்ளது.
பின்னா் இதுகுறித்து அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக ரத்த தானம் வழங்கி வருகிறேன். ரசிகராகவும், நிா்வாகியாகவும் ரத்ததானம் வழங்கி வந்தேன். தற்போது அமைச்சராக ரத்த தானம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சேலம் மாவட்டத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முதல்வா் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். குறிப்பாக, பேனா் வைப்பதை தவிா்த்து பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு பயன்படும் வகையில் நலத்திட்ட உதவிகளை நிா்வாகிகள் வழங்க வேண்டும். இதனை பின்பற்றி தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் முதல்வா் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரப் பேருந்து தயாரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

அரசுப் பேருந்துகளில் சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதி விரிவாக்கம்

நீட் தோ்வில் தோ்ச்சி: ஏற்காடு மாணவிக்கு அமைச்சா் வாழ்த்து

அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: விரைவில் முதல்வா் அறிவிப்பாா் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



