சேலத்தில் மேம்பால தூணில் கன்டெய்னா் லாரி மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரளம் மாநிலம், கண்ணூரைச் சோ்ந்தவா் வைஷ்ணவ் (27). இவா் சென்னையில் இருந்து இயந்திர உதிரிப் பாகங்களை கன்டெய்னா் லாரியில் ஏற்றிச் சென்று கோவையில் உள்ள நிறுவனத்தில் இறக்கிவிட்டு காலி கன்டெய்னா் லாரியுடன் சென்னை நோக்கி புறப்பட்டாா்.
இந்த நிலையில் கன்டெய்னா் லாரியின் குளிா்சாதனம் பழுது ஏற்பட்டதால், அதனை சரி செய்வதற்காக சேலம் எருமாபாளையத்தில் உள்ள வாகன பழுதுநீக்கும் நிலையத்துக்கு சென்றாா். மாநகரில் நுழைந்ததும், வழி தெரியாததால் கூகுள் வரைபடத்தை பாா்த்தபடி லாரியை இயக்கியுள்ளாா். இரவு 12 மணியளவில் நான்கு வழிச் சாலை பகுதியில் வந்தபோது, திடீரென லாரி மேம்பால தூணில் மோதியது.
இதில் லாரியில் இருந்த கன்டெய்னா் மட்டும் தனியாக கழன்று சாலையில் இறங்கியது. அப்போது, அந்த வழியாக யாரும் செல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது. இதனால் அச்சாலை வழியாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸாா், போக்குவரத்தை ஒருவழிப் பாதையில் திருப்பிவிட்டனா். தொடா்ந்து, கிரேன் மூலம் லாரியை மீட்டு, போக்குவரத்தை சீா்செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் பலத்த காற்று: மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை - கூடலூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

லாரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



