பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காஞ்சிபுரம் அருகே பாலாறு மேம்பாலத்தில் லாரி பழுது! போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம் அருகே பாலாறு மேம்பாலத்தில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

போக்குவரத்து நெரிசல் - கோப்பிலிருந்து

Updated On :13 ஜூன் 2026, 12:32 pm IST

காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் லாரி பழுதானதால் 2 கி.மீ. தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் லாரி ஒன்று பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த லாரியின் முன்புற டயர் திடீரென கழன்று ஓடியது. ஓட்டுநர் சாமர்த்தியமாக செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தின் நடுப்பகுதியில் லாரியை நிறுத்தினார். மேம்பாலத்தின் நடுவில் லாரி பழுதாகி நின்றதால் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

போக்குவரத்து நெரிசல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை நீடித்ததால், வேலைக்குச் செல்வோர் மற்றும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, பழுதான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.