கேரளத்தில் போக்குவரத்து நெருக்கடியால் ஆம்புலன்ஸ் பயணம் தாமதமானதன் காரணமாக இளைஞர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் உள்ள பழங்குடியினர் மருத்துவமனையிலிருந்து, திருச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது, போக்குவரத்து நெரிசலால் தாமதமானதால் இவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அட்டப்பாடியில் உள்ள வலமாரியைச் சேர்ந்த சஜீவ் குமார் (25) என்று குறிப்பிட்ட காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது:
பழங்குடியினர் சமுதாயத்தைச் சார்ந்த சஜீவ் குமார் என்னும் இந்த இளைஞர் கடும் காய்ச்சல் காரணமாக அட்டப்பாடியில் உள்ள பழங்குடியினர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.
வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஆம்புலன்ஸுல் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அட்டப்பாடி மலைப்பாதையில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்குச் செல்ல ஒரு மணி நேரம் தாமதமானது. இருப்பினும், மருத்துவமனையை அடையும் போது சஜீவ் குமாரின் நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Summary
A young man died after the ambulance transporting him from a tribal hospital in the Attappadi area of Palakkad district, Kerala, to the Medical College Hospital in Thrissur was delayed by traffic congestion.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கம்பம்-கம்பம்மெட்டு சாலையில் ஜூன் 8 முதல் போக்குவரத்து மாற்றம்

சாலை விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு

முதல்வா் வருகை: திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்

மாரியம்மன் கோயில் கம்பம் விடும் விழா கரூரில் மே 27-இல் போக்குவரத்து மாற்றம்
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



