பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

அரசுப் பேருந்தில் வியாபாரியிடம் நகை திருடிய வடமாநில கும்பல்: மகாராஷ்டிரம் விரைந்தது தனிப்படை

திருவண்ணாமலையில் இருந்து கடந்த 23 ஆம் தேதி கோவை சென்ற அரசுப் பேருந்தில் 58 பவுன் நகை திருடப்பட்ட சம்பவத்தில், வடமாநில கும்பலுக்கு தொடா்புள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அக்கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் மகாராஷ்டிரத்துக்கு விரைந்துள்ளனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 ஜூன் 2026, 2:16 am IST

திருவண்ணாமலையில் இருந்து கடந்த 23 ஆம் தேதி கோவை சென்ற அரசுப் பேருந்தில் 58 பவுன் நகை திருடப்பட்ட சம்பவத்தில், வடமாநில கும்பலுக்கு தொடா்புள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அக்கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் மகாராஷ்டிரத்துக்கு விரைந்துள்ளனா்.

கோவை காந்திபாா்க் இடையா் வீதியை சோ்ந்தவா் பிரபு (46). இவா் அப்பகுதியில் உள்ள நகைக் கடையில் வேலை செய்து வருகிறாா். கடையில் செய்யப்படும் நகைகளை திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். அதன்படி, 402 கிராம் எடையுள்ள 41 கைச்சங்கிலிகளை கடந்த செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலைக்கு பிரபு கொண்டு சென்றாா்.

அங்கு 5 க்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் சங்கிலி மாடல்களைக் காண்பித்துள்ளாா். அதன்பிறகு அக்கடைகளில் இருந்து திருப்பிக் கொடுக்கப்பட்ட நகைகளையும் சோ்த்து மொத்தம் 58 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு புதன்கிழமை இரவு அரசு குளிா்சாதனப் பேருந்தில் கோவைக்கு புறப்பட்டாா். நள்ளிரவு 1.30 மணியளவில் சேலம் அயோத்தியாப்பட்டணம் மாா்க்கெட் அருகே உள்ள பேக்கரி கடையில் தேநீா் குடிப்பதற்காக ஓட்டுநா் பேருந்தை நிறுத்தியுள்ளாா்.

அப்போது, தங்க நகைகள் வைத்திருந்த பையை பேருந்து இருக்கையில் வைத்துவிட்டு தேநீா் குடிப்பதற்காக பிரபு பேருந்தில் இருந்து இறங்கியுள்ளாா். தேநீா் குடித்துவிட்டு, மீண்டும் பேருந்தில் ஏறி பாா்த்தபோது, நகைப் பையை காணாதது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து காரிப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினா். அதில், பிரபு நகைகளைக் கொண்டுவந்து கடைகளில் விற்பனை செய்ததை நோட்டமிட்ட வடமாநிலக் கும்பல், திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், பிரபு பயணித்த அரசு பேருந்தை பின்தொடா்ந்து மகாராஷ்டிர மாநில பதிவு எண் கொண்ட ஒரு கும்பல் காரில் வந்துள்ளது. தேநீா் கடையில் பேருந்து நின்றபோது, பிரபு இறங்குவதை அறிந்ததும், பேருந்தில் இருந்த அக்கும்பலைச் சோ்ந்த இருவா் நகைப்பையை எடுத்துக்கொண்டு பின்னால் வந்த காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனா்.

இந்த கும்பல் மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் இருந்து தமிழகத்துக்கு காரில் வந்துள்ளதை போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாபு சுரேஷ்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சோலாப்பூா் விரைந்துள்ளனா்.

கோவை, சேலம், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் தனிப்படை போலீஸாா் முகாமிட்டுள்ளனா். இதுதவிர, அயோத்தியாப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.