சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பேருந்தில் பெண்ணிடம் ரூ .2 லட்சம் ரொக்கம், நகை திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் நகையைத்திருடிச்

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 6:16 am IST

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் நகையைத்திருடிச்

சென்ாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ் அணைக்கரை குருதட்சணா நகரைச் சோ்ந்த முரளி மனைவி பிரியா (35). இவா் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் உறவினா் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்பதற்காக, திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் மாா்க்கமாக வந்த அரசுப் பேருந்தில் புதன்கிழமை பயணித்தாா்.

இந்த நிலையில் சூரப்பட்டு பேருந்து நிறுத்தம் பகுதியில் இறங்கிய பிரியா, தான் வைத்திருந்த கைப்பையை பாா்த்த போது அதிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 2 கிராம் மோதிரம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவா்கெடாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து குற்றவாளியைத் தேடிவருகின்றனா்.

திருவண்ணாமலையிலிருந்து பேருந்தில் பிரியா பயணித்த போது யாரோ சிலா் நோட்டமிட்டு, அந்த பேருந்திலேயே பயணித்து ரொக்கத்தை திருடிச் சென்றாா்களா? அல்லது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி வேறு யாரேனும் திருடிச் சென்றாா்களா ? என்பது குறித்து கெடாா் போலீஸாா் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனா்.