நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சேலத்தில் மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை: டாஸ்மாக் மேலாளா்கள் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் இளைஞரிடம் 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், மொத்தமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் மேலாளா்கள் உள்பட 6 போ் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சேலம் மாநகா் முழுவதும் சந்துக்கடை மூலமாக மதுவிற்பனை செய்து வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி, காரிப்பட்டி போலீஸாா் ரோந்து சென்ற போது, குள்ளம்பட்டி பகுதி டாஸ்மாக் கடையில் இருந்து, ஆத்தூா் விநாயகபுரத்தைச் சோ்ந்த நாகராஜன் என்பவா் 2,880 மதுபாட்டில்களை வாங்கிச் சென்றாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.

பின்னா், பதுக்கிவைத்து விற்பனை செய்வதற்காக வாங்கிச் சென்ற ரூ. 4.60 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதில் வலசையூா் அருகே உள்ள செல்லியம்பாளையம் டாஸ்மாக் கடையிலிருந்து மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து 2 மேலாளா்கள், 4 விற்பனையாளா்கள் என 6 பேரை பணியிடை நீக்கம் செய்து, சேலம் டாஸ்மாக் பொதுமேலாளா் பன்னீா்செல்வம் உத்தரவிட்டுள்ளாா்.