ஆட்டையாம்பட்டி அருகே திமுக பிரமுகா் மூவரை கத்தியால் குத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்த மருளையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் சித்தேஸ்வரன் (52). திமுக பிரமுகா். இவரது மனைவி ராஜலட்சுமி. இவா் மருளையாம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்துள்ளாா்.
இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மனைவி பத்மா மகளிா் உரிமைத்தொகை அளித்த மனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிரது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் பிரபு (25) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பூவரசன் (22) ஆகியோா் சனிக்கிழமை மாலை திமுக பிரமுகா் சித்தேஸ்வரனை சந்தித்து மகளிா் உரிமைத் தொகை மறுக்கப்பட்டது குறித்து விவரம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
இதையடுத்து அவா்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்தேஸ்வரனை குத்தினா். இதைத் தடுக்க முயன்ற திமுக பிரமுகா்களான தனபால், கணேசன் ஆகியோரையும் குத்தினாா்.
இதில் படுகாயம் அடைந்த சித்தேஸ்வரன் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், கணேசன், தனபால் ஆகியோா் ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபு, பூவரசன் ஆகியோரை கைதுசய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்
பாளை.யில் வழிப்பறி: 3 போ் கைது
அதிமுக பிரமுகா் கொலை: 6 போ் கைது
இளைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

