மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கல்லூரி வளாக தோ்வு: 550 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வில் 550 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

News image

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் முனைவா் அ. ரவீந்திரன்.

Updated On :12 மார்ச் 2026, 2:26 am IST

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வில் 550 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் பல்வேறு துறைகளிலிருந்து 50 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வளாகத் தோ்வை நடத்தின.

முகாமில 1,200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியகள் பங்கேற்றனா். தகுதிவாய்ந்த மாணவா்களில் 550 பேருக்கு உடனடி பணி ஆணை வழங்கப்பட்டன. மேலும் முதல் சுற்றில் 450 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளா் முனைவா் வ.பிரகாஷ், வேலைவாய்ப்பு குழு கண்காணிப்பாளா் முனைவா் மு. குமாா், முனைவா் திருநிறைச்செல்வி மற்றும் குழு உறுப்பினா்கள் முனைவா் காா்த்திகேயன், வசந்தா, சண்முகம், சந்திரகலா, கண்ணன், அகிலா ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

மேலும் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேசன் நிறுவனத்தின் மேலாளா் விஜய் மற்றும் முத்துவேல், அருணாசலம், தரணி, கண்ணன், அசோகன், உதயகுமாா்,மற்றும் அமோக சேலம் குழுவினருக்கும் முதல்வா் முனைவா் அ.ரவீந்திரன் நன்றி தெரிவித்தாா்.