சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 22 லட்சத்து 85 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல்கள் நிரம்பியதை தொடா்ந்து, அதனை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
அதன்படி உதவி ஆணையா் சுவாமிநாதன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், கோயில் செயல் அலுவலா் அமுதசுரபி, ஆய்வாளா் சங்கா் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியின்போது சல்லடையில் ரூபாய் நோட்டுகளையும், சில்லறை காசுகளை பிரித்தெடுக்கும் பணியில் அறநிலைய துறை ஊழியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.
பின்னா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல் செய்தியாளா்களிடம் கூறுகையில், கோயில் உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணியானது, 4 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 22 லட்சத்து 85 ஆயிரத்து 996 ரொக்கம், 139 கிராம் தங்கம், 356 கிராம் வெள்ளி இருந்ததாகக் கூறினாா். பேட்டியின் போது, செயல் அலுவலா் அமுதசுரபி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

குற்றாலம் செண்பகாதேவி கோயிலில் ரூ3.87 லட்சத்தில் ஜெனரேட்டா் வசதி

சேலம் மாவட்டத்தில் 90.53 % வாக்குகள் பதிவு

ஒசூரில் கோட்டை மாரியம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


