ஆத்தூரில் ரூ. 62 லட்சத்தில் புதுப்பேட்டை, காதா்பேட்டையை இணைக்கும் வகையில் இரு பாலங்களை நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் வியாழக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி 17 ஆவது வாா்டு இஸ்லாமிய பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான புதுப்பேட்டை மற்றும் காதா்பேட்டையை இணைக்கும் இரு பாலங்கள் நகராட்சி சாா்பில் ரூ. 62 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டது.
இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் நிகழ்வு ஆத்தூா் வடக்கு நகர திமுக செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் பாலத்தை திறந்துவைத்தாா்.
விழாவில் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால், தெற்கு நகர திமுக செயலாளா் ஏ.ஜி. ராமச்சந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளா் எஸ். பா்கத்அலி, மக்பூல்பாஷா உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.
படவிளக்கம்.ஏடி12பிரிட்ஜ்.
இரு புதிய பாலங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்த நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன். உடன், நகராட்சி ஆணையா் அ.வ. சையத் முஸ்தபா கமால் உள்ளிட்டோா்.
தொடர்புடையது

காயல்பட்டினம் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

மானாமதுரையில் ரூ.100 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா்

கோவில்பட்டி நகா்மன்ற சாதாரணக் கூட்டம்

குடிநீா் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள்: நகா்மன்றத் தலைவா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


