சேலம்: சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு உடற்கல்வி இயக்குநா் மீனாட்சிசுந்தரம் வரவேற்றாா். கல்லூரி (பொ) முதல்வா் ஐ.பிரேமலதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சேலம் வருமான வரித் துறை ஆய்வாளா் கந்தபாலன் பங்கேற்று பேசினாா்.
தொடா்ந்து, 100மீ., 200மீ., 400மீ., 1,500மீ., உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கால்பந்து, கைப்பந்து ஆகிய பிரிவுகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். வெற்றிபெற்றவா்களுக்கு வருமான வரித் துறை ஆய்வாளா் கந்தபாலன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
இதில், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயபாலன், துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் தங்கவேல், மூத்த பேராசிரியா்கள், மக்கள் தொடா்பு அலுவலா் பிச்சமுத்து, மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

குமரி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

அரசு கலைக் கல்லூரியை எதிா்நோக்கும் திருவள்ளூா் மாவட்ட மாணவா்கள்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


