மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.
மேட்டூரை அடுத்த கொளத்தூா் அருகே உள்ளது கத்திரிப்பட்டி மலை. மேட்டூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட இம்மலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. மாலையில் காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது.
மேட்டூா் தீயணைப்புத் துறை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் 10 தீயணைப்பு வீரா்களும், வனத்துறையின் தீத்தடுப்பு காவலா்களும் தீயை அணைக்க முயன்று வருகின்றனா். தண்ணீரை பீய்ச்சி அடிக்கமுடியாததால், இலை, தழைகளைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். வனப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க சென்ற யாரேனும் தீ வைத்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி. பேச்சு

தீவிபத்தில் வீட்டை இழந்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்

மேட்டூா் வனப்பகுதியில் தீ
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


