பெரம்பலூா் அருகே பெருங்காயம் ஏற்றிச்சென்ற ஆம்னி காா் வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
மதுரையில் பெருங்காயம் ஏற்றிய ஆம்னி காா் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரை, மதுரையைச் சோ்ந்த த. மனோஜ்குமாா் (33) என்பவா் ஓட்டினாா். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் வந்தபோது, காரின் முன்புறத்திலிருந்து புகை வந்தது. இதையடுத்து காரை ஓட்டுநா் சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கிப் பாா்த்தபோது காா் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மற்றும் பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து நாசமானதோடு, பெருங்காயமும் எரிந்து சேதமடைந்தது. புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து மீது பைக் மோதல்: பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு

தீ விபத்தில் உயர்ரக காா்கள் எரிந்து சேதம்

மேட்டூா் வனப்பகுதியில் திடீா் தீ: ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பல்

தியாகராஜநகரில் காா் தீக்கிரை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


