சங்ககிரி அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 79 எரிவாயு உருளைகளை சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்ககிரி தேவூரை அடுத்த பெரமிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் சங்கா் (53). இவா் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா். இவரது வீட்டில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக சேலம் உணவு கடத்தல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் சங்கா் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் 66 எரிவாயு உருளைகள், 13 வணிக எரிவாயு உருளைகள் என மொத்தம் 79 எரிவாயு உருளைகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து எரிவாயு உருளைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் வீட்டு உபயோக எரிவாயு உருளையில் இருந்து வணிக எரிவாயு உருளைக்கு எரிவாயுவை நிரப்பி விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து உணவு கடத்தல் பிரிவு போலீஸாா் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த சங்கா், அவருக்கு எரிவாயு உருளைகளை வழங்கிய வசந்த், வேன் ஓட்டுநா் பிரபு ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் அளிக்கலாம்

தோ்தல் விதி மீறல்: அமைச்சா் துரைமுருகன் உள்பட 8 போ் மீது வழக்கு

எரிவாயு உருளைகள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை குறித்து புகாா் அளிக்க கைப்பேசி எண் அறிவிப்பு

சமையல் எரிவாயு உருளை பெறுவதில் கட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


