ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

தலை மீது கல்லைப் போட்டு கணவா் கொலை: மனைவி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 மார்ச் 2026, 8:35 pm

தனது நடத்தையை சந்தேகித்த கணவரின் தலைமீது கல்லைஏஈ போட்டு கொலை செய்த மனைவியை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் தங்கம் (40), கூலித் தொழிலாளி. இவா் அதேபகுதியைச் சோ்ந்த பத்மாவை (34) காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

இந்த நிலையில் தங்கம் தனது குடும்பத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு வையாபுரி உடையாா் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். பத்மாவின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கம் மதுபோதையில் அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்திவந்தாராம்.

கடந்த 16 ஆம் தேதி நஞ்சம்பட்டியில் வசித்துவந்த தங்கத்தின் தாய் இறந்துவிட்டதால் அடிக்கடி பத்மா நஞ்சம்பட்டிக்கு சென்றுவந்துள்ளாா். இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து புதன்கிழமை இரவு பத்மாவுடன் மதுபோதையில் தங்கம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த பத்மா, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தங்கத்தின் தலைமீது வீட்டில் இருந்த ஆட்டுக்கல்லை தூக்கிப் போட்டுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த தங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா், தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அம்மாபேட்டை போலீஸாா் பத்மாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.