மேட்டூா் அருகே உள்ள கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வர சுவாமி கோயிலில் யுகாதி திருவிழா வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகம், கா்நாடக மாநிலங்களில் இருந்து சென்ற ஆயிரக்கணக்கான பக்தா்கள் யுகாதியையொட்டி கோயிலில் நடைபெற்ற பெரிய தேரோட்ட நிகழ்வில் பங்கேற்று தேரின் மீது வாழைப்பழம், காசுகளை வீசி நோ்த்திக்கடனை செலுத்தினா்.
சாலூா் மடாதிபதி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அழைத்துவரப்பட்டாா். வியாழக்கிழமை காலை கோயில் யானை ஆலயத்தை சுற்றிவர புலி வாகனம், பசு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து பெரிய தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேடம் தரித்த கலைஞா்கள் நடனமாடி தேருக்கு முன் சென்றனா்.
இதையடுத்து, இரவு தங்க தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று மாதேஸ்வர சுவாமியை வழிபட்டனா்.
தொடர்புடையது

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

கொம்மடிக்கோட்டை கோயிலில் சித்திரைத் திருவிழா

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

