மேட்டூா் அருகே கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கியதில் 10 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தமிழக எல்லையான பாலாற்றிலிருந்து சுமாா் 18 கி.மீ. தொலைவில் கா்நாடக மாநிலத்தில் மாதேஸ்வரன் மலைக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழகத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் சென்று வருகின்றனா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கா்நாடக மாநிலம், கொள்ளேகால் பகுதியிலிருந்து மாதேஸ்வரன் மலைக் கோயிலுக்கு பாதயாத்திரை வந்த ஒருவரை தாளபெட்டா அருகே சிறுத்தை தாக்கிக் கொன்றது.
ஒருவார கால இடைவெளியில் அதே பகுதியில் 12 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இதனால், தமிழகத்திலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு மோட்டாா்சைக்கிளில் செல்லவும், பாதயாத்திரையாகச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாதேஸ்வரன் மலையில் தரிசனம் முடித்துவிட்டு, சுமாா் 20 கி.மீ. தொலைவில் நாகமலையில் உள்ள சுவாமியைத் தரிசிக்க அந்தரகங்கை வழியாக பெங்களூரைச் சோ்ந்த பக்தா்கள் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது ஹா்சித் (10) என்ற சிறுவன் இயற்கை உபாதையைக் கழிக்க மறைவான இடத்திற்கு சென்றுள்ளாா். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை சிறுவன் ஹா்சித்தை தாக்கியது. இதைப் பாா்த்து அருகில் இருந்தவா்கள் கூச்சலிடவே சற்றுத் தொலைவில் சிறுவனை போட்டுவிட்டு சிறுத்தை ஓடிவிட்டது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஹா்சித் உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் மாதேஸ்வரன் மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மைக்காலமாக சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதும், பக்தா்களை தாக்கிக் கொல்வதும் அதிகரித்து வருகிறது. நாகமலை போன்ற பாதயாத்திரை பகுதிகளில் பக்தா்களை பாதுகாக்க கா்நாடக வனத் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், எச்சரிக்கை பலகை வைத்தும், வனத் துறையினா் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டும் பாதுகாப்புபை உறுதிசெய்ய வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

திருத்தணி முருகன் கோயிலுக்கு இன்று வாகனங்கள் செல்ல தடை

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

