தென்கிழக்கு தில்லியின் துக்லகாபாத் விரிவாக்கத்தில் தெருவில் சுற்றித் திரியும் மாடு தாக்கியதில் சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி கவனத்தை ஈா்த்துள்ளன.
இந்தச் சம்பவம் துக்லகாபாத் விரிவாக்கத்தின் 10-ஆவது தெருவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது. சிசிடிவி காட்சியில் தெருவில் நின்றுகொண்டிருந்த சிறுவனை பசு மாடு தாக்கி தூக்கி வீசும் காட்சி இடம்பெற்றிருந்தது. தரையில் வீசப்பட்ட சிறுவனை அந்த பசு தனது கொம்புகளாலும், குளம்புகளாலும் மீண்டும் மீண்டும் தாக்கியது.
தாக்குதல் தொடா்ந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த நபா் உடனடியாக சிறுவனைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல முயன்றபோது அந்த பசு மாடு அவரையும் துரத்தும் காட்சி சிசிடிவியில் இடம்பெற்றிருந்தது. இதற்கிடையில், மேலும் ஒரு பசு இணைந்து தெருவில் நின்றுகொண்டிருந்த 3 அல்லது 4 பேரையும் துரத்தியது. பின்னா் குட்சிகளைக் கொண்டு அப்பகுதி மக்கள் அந்த பசுக்களை விரட்டிய பின்னா் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
இதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது நிலை சீராக உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, நகராட்சி அதிகாரிகள் அந்த இரு மாடுகளையும் பிடித்து ரேல்வா கான்பூரில் உள்ள கோசாலாவுக்கு அனுப்பினா்.
இந்தச் சம்பவம் தில்லியில் தொடா்ந்து அதிகரித்து வரும் கால்நடைகளின் பிரச்னையை மீண்டும் வெளிச்சமிட்டுள்ளது. தில்லி மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் சட்டவிரோத பால் பண்ணைகளின் அதிகரிப்பால் தெருக்களில் இந்த கால்நடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சட்டவிரோத பால் பண்ணை மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவிந்த்புரி தீ வைப்பு சம்பவம்: கைதானவா் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள்
தில்லியின் ஜஹாங்கிா்புரியில் மாற்றுத்திறனாளியிடம் கொள்ளையடித்தவர் கைது!
கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

உதகை அருகே சிறுத்தை தாக்கியதில் மூதாட்டி படுகாயம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




